சவூதி செல்வந்தரின் உயிலில், இலங்கையருக்கு ஒருதொகை - அவசரமாக தொடர்பு கொள்ளவும்..!

சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன்னர் தனவந்தர் ஒருவரிடம் கடமையாற்றிய இலங்கையரான ஹமீட் லெப்பை மொஹமட் சீசான் என்பவரை குறித்த தகவல்களை தனவந்தரின் புதல்வன் தேடி வருகின்றார்.
தனவந்தரின் உயிலில் ஹமீட் லெப்பை மொஹமட் சீசானுக்கு ஒரு தொகைப் பணத்தை ஒதுக்கியுள்ளார்.
இந்தப் பணத்தை வழங்குவதற்காக மொஹமட் சீசானை கண்டுபிடித்து தரும்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தனவந்தரின் புதல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹமீட் லெப்பை மொஹமட் சீசானின் கடவுச்சீட்டு இலக்கம் J 0150924 என தெரிவித்துள்ள வேலைவாய்ப்பு பணியகம் மொஹமட் சீசானோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாராவது இருந்தால் 011 -23560912 , 011 - 2864100என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி பணியகத்தின் ஊடகச் செயலாளர் நளின் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல்: அசீம்