மைத்­தி­ரி – மஹிந்­த இணையும் காலம் நெருங்­கி வருகின்றது. முள்ளிநியூஸ்

மைத்­தி­ரி – மஹிந்­த இணையும் காலம் நெருங்­கி வருகின்றது.



பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மற்றும் கூட்டு எதி­ர­ணி­யினர் இணைந்து உடன்­ப­டிக்கை மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை நிரந்­த­ர­மாக வீழ்த்தும் திட்­டத்தை வகுத்­துள்­ளனர். 2020இல் நடை­பெறும் தேசியத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் வீழ்ச்­சிக்கு சதித்­திட்டம் வகுக்­கப்­ப­டு­வ­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் கூட்­டணி ஒன்­றாக பல­ம­டையும் காலம் நெருங்­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டது.

பொது எதி­ர­ணியில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் கைகோர்க்­க­வேண்டும் என பொது எதி­ரணி உறுப்­பினர் குமார் வெல்­கம தெரி­வித்­துள்ள நிலையில் பொது எதி­ர­ணி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் கைகோர்க்க தயா­ராக உள்­ள­னரா என வின­வி­ய­போதே கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிரி­பா­லடி சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்­சியின் கரங்­களை பலப்­ப­டுத்தும் நோக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்த்து பொது எதி­ரணி உறுப்­பி­னர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் பொது எதி­ர­ணியின் ஒரு­சி­ல­ருக்கும் இடையில் உள்ள தொடர்­புகள் எவ்­வா­றா­னவை என்­பது வெளிப்­ப­டை­யாக தெரி­கின்­றன. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தாது காலத்தை கடத்­து­வதும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் நிரந்­தர பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வதும் இவர்­க­ளது திட்­ட­மிட்ட செயற்­பா­டாக உள்­ளது.எதிர்­வரும் 2020ஆம் ஆண்டில் நடை­பெ­ற­வுள்ள தேசிய தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தி ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் அர­சாங்­கத்தை உரு­வாக்­கவே இவர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர்.

ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றாக கைகோர்த்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்த வேண்­டிய காலம் வந்­துள்­ளது.கட்­சிக்குள் முரண்­பா­டுகள் இல்­லாது மக்­களின் மனதில் உள்ள கட்­சி­யாக மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை உரு­வாக்க வேண்டும்.

மேலும் புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்கப் பட்­டு­வ­ரு­கின்­றன.எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஒற்றையாட்சிக்கு பாதகமான எந்த தீமானங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரிக்கப் போவதில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சகல மக்களுக்குமான தீர்வுகள் தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW