யாழ்: வீதி விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் ஸ்டிக்கர்
யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துகளை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் இன்று (7) வாகனங்களில் ஒட்டப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலீசாரினால் திருநெல்வேலி சந்தியில் வைத்து விபத்துகளை தடுக்கும் குறித்த விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஸ்டெனிஸ்லஸ் உட்பட கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கலந்து சிறப்பித்தார்.