இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : இதுவரை ஐவர் பலி : பலர் காணாமல் போயுள்ளனர் முள்ளிநியூஸ்

இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : இதுவரை ஐவர் பலி : பலர் காணாமல் போயுள்ளனர்


இந்தியாவின், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள பகரியா போடாய் எனுமிடத்தில் பெரிய நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.

ராஞ்சியில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்துக்குள் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணிகளை மகாலட்சுமி என்ற நிறுவனம் செய்து வருகிறது.

நேற்றிரவு தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் நிலக்கரி ஏற்றிக் கொண்டிருந்த சுமார் 12 வாகனங்கள் அதில் சிக்கின.

20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதன்போது நிலக்கரி சுரங்கத்துக்குள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

நேற்றிரவு கடும் பனிப் பொழிவும் இருளும் இருந்ததால் மீட்புப் பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை. இன்று அதிகாலை 6 மணிக்குத்தான் மீட்புப் பணி தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த மீட்பு பணியில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW