கந்தளாயில்:பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தில் தங்க ஆபரணங்களை திருடியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இருவர் கைது முள்ளிநியூஸ்

கந்தளாயில்:பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தில் தங்க ஆபரணங்களை திருடியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இருவர் கைது



திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்க ஆபரணங்களை திருடி விட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் 27 இரவு 8.30மணியளவில் இடம்பெற்றதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 4ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மேலும், இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.
 
உயிரிழந்தவரின் சடலம், தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW