கருகலைப்பு மாத்திரைகளை இலங்கைக்கு கடத்திவர முயன்றவர் கைது.! முள்ளிநியூஸ்

கருகலைப்பு மாத்திரைகளை இலங்கைக்கு கடத்திவர முயன்றவர் கைது.!




கருக்கலைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி வர முயற்சித்த நபர் ஒருவர், கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்த ஒரு தொகை மாத்திரைகளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து பஸ் ஒன்றின் ஊடாக குறித்த மருந்து தொகையினை விமான நிலையத்திற்கு எடுத்துவந்தபோது இராமநாதபுரம் பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மணிவன் என்பவருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் உதவி பொலிஸ் பரிசோதகர் சர்வேஜ் ராஜ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது மேற்படி மாத்திரைகளை இலங்கைக்கு கடந்த முயன்ற 35 வயதுடைய வீ.ராஜேந்திரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கடத்தி வர முயன்ற மாத்திரையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய இவரால் கடத்தி வரப்பட்ட 123,000 மாத்திரைகள் அடங்கிய 150 பொதிகளில் உள்ளடக்கபட்டிருந்துள்ளது. மேலும் குறித்த நபரிடத்தில் பொலிஸ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் ஊடாக இம்மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW