ஜேர்மனியிலும் புர்காவைத் தடை செய்ய முஸ்தீபு!

நெதர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதற்கு எதிரான பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது ஜேர்மனியிலும் முடியுமான அனைத்து இடங்களிலும் புர்கா தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் ஏன்ஜலா மேர்க்கல்.
நான்காவது முறையாக தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் புர்கா தடைக்குத் தாம் ஆதரவளிக்கப் போவதாக தமது கட்சி மாநாட்டில் வைத்து அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஏன்ஜலாவின் கட்சி உறுப்பினர் ஒருவரால் இத்திட்டம் பாராளுமன்றிலும் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.