கிண்ணியா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில உயர்கல்வி டிப்ளோமா தாரிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திப்பு முள்ளிநியூஸ்

கிண்ணியா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில உயர்கல்வி டிப்ளோமா தாரிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திப்பு



கிண்ணியா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில உயர்கல்வி டிப்ளோமா தாரிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஆர்.எம்.அன்வர் சந்தித்து கலந்துையாடல் ஒன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இச் சந்திப்பு நேற்று 13 செவ்வாய் கிழமை கிண்ணியாபிரதேசத்தில் உள்ள எல்லைக் கிராமமான காக்காமுனையில் இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச பட்டதாரிகள் வெளிமாகாணத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில உயர்கல்வி டிப்ளோமா,தொழிநுட்ப,கணக்கியல் கற்கை நெறியை கற்கும் மாணவர்கள் இச் சந்திப்பில் பங்கு பற்றியிருந்தனர்.

இச் சந்திப்பில் இவர்கள் எதிர்  நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை கேட்டறிந்த மாகாண உறுப்பினர் தனது பதவிகாலத்தில் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இச் சந்திப்பு தமக்கு பிரயோசனம் உள்ளதாகவும் கலந்து கொண்டோரும் தெரிவித்துள்ளதோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வருக்கு நன்றி தெரிவித்தனர்



போட்டோ உதவி:-
(ஐயூப்க்கான் சேர்)

எழுதுனர்:-
(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW