ஜனாதிபதிக்கு மரண அச்சுசுறுத்தல் விடுத்தவருக்குப் பிணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முகநூலில் ஒலிப்பதிவு மூலமாக இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதாகியிருந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை ஜனவரி 13ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் 10 லட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.