பேஸ்புக்கில் இனி 'குரூப் வீடியோ Call '

பேஸ்புக், புதிதாக 'Group Video Call' வசதியைஅறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஒரே குரூப்பில் உள்ள 50 நபர்கள் வரை ஒரே நேரத்தில் பேசிக்கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியில் ஆறு பேர் வரை வீடியோ call மூலமாகத் தெளிவாகப் பார்த்துப் பேசமுடியும்.
இந்த எண்ணிக்கை அதிகமாகும் போது, பேசுபவரின் வீடியோ பெரிய வடிவிலும் மற்றவர்களின் வீடியோக்கள் சிறிய வடிவத்திலும் திரையில் தெரியத் தொடங்கும். எனினும் வீடியோ தெரியாவிட்டாலும், 50 பேர் வரை voice மூலமாகவும், chat மூலமாகவும் பேசிக்கொள்ள முடியும்.
இந்தப் புதிய வசதி முதல்கட்டமாக Desktop Versionல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைலில் facebook அப்டேட் செய்வதன் மூலம், இந்தப் புதிய வசதியைப் பெற முடியும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து விதமான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் facebook app ல்இந்தவசதியைஏற்படுத்த 'facebook திட்டமிட்டுள்ளது. பயனர்களைக் கவரும்விதமாக, facebook நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.