விமல் வீரவன்ச FCIDயில் ஆஜர்! முள்ளிநியூஸ்

விமல் வீரவன்ச FCIDயில் ஆஜர்!





நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைக்கு சமூகமளிக்காது தவிர்த்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

விசாரணைக்காக அழைக்கப்படும் நாட்களில் வேறு காரணங்களைக் கூறி அவற்றைத் தவிர்த்து வந்த விமலுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற நிதிமோசடிப் பிரிவு இவ்வுத்தரவைப் பெற்றிருந்தது. இதன் போது விமல் வீரவன்ச நாட்டில் இல்லையென அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த போதிலும், அவர் எப்போது வருகிறாரோ அப்போது உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அரசுக்குச் சொந்தமான வாகன துஷ்பிரயோக விவகாரத்திலேயே விமல் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கினற அதேவேளை அதே விவகாரத்தில் அவரது சகோதரர் மற்றும் கட்சிப் பேச்சாளர் முசம்மில் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் இராவணா பலய செயலாளர் சத்தாதிஸ்ஸ தேரர் விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW