MPக்களுக்கான ‘நெறிமுறைகள்’ ; இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சபையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள், பேச்சுக்கள் மற்றும் நடந்துகொள்ளும் விதம் அதிருப்தியளித்து வரும் நிலையில் சபாநாயகரின் முன்னெடுப்பில் இவ்வொழுக்கக் கோவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.