கட்டிழந்து மாடுகள் மீது மோதிய பஸ்; 10 மாணவர்கள் படுகாயம் முள்ளிநியூஸ்

கட்டிழந்து மாடுகள் மீது மோதிய பஸ்; 10 மாணவர்கள் படுகாயம்


யாழ்ப்பாணத்திலிருந்து மொரட்டுவ நோக்கிப் பயணித்த பேருந்து ஏ-9 முதன்மைச் சாலையில் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சாலையைக் கடந்த எருமை மாட்டுப் பட்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 எருமை மாடுகள் பரிதாபமாக உயரிழந்ததுடன். 10மாடுகள் படுகாயமடைந்தன. பேருந்தில் பயணித்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று மொரட்டுவ நோக்கிப் புறப்பட்ட பேருந்து இரவு 9.30 மணியளவில் மாங்குளத்தை தாண்டி கொல்லர்புளியங்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வீதியைக் கடந்த மாட்டுப் பட்டியின் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மாங்குளம் வைத்தி யசாலைக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நோயாளர் காவுவண்டியில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் வைத்தியசாலை ஊழியர்கள் படுகாயமைந்தவர்களை வைத்தியசலைக்கு ஏற்றிச் சென்றனர்.

சிலர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் 15 மாடுகள் உயிரிழந்ததோடு 10 மாடுகள் படுகாயமைந்து வீதியில் கிடக்கின்றன. படுகாயடைந்த மாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கால்நடை வைத்தியரின் உதவி நாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW