A/L சித்தியடையாத மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி முள்ளிநியூஸ்

A/L சித்தியடையாத மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி


க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத, எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெறாத மாணவர்களுக்காக முழுநாள் இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று, கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பின் ஒருக்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற, குறிப்பாக அதன் ஆரம்பம் முதல் இன்றுவரை ஆயிரக் கணக்கான வசதிகுறைந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்ற செரண்டிப் எடிகேஷனல் பவுண்டேஷன் (SEF) தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் இந்நிகழ்ச்சிக்கான முழுமையான அனுசரணையை வழங்குகின்றது.

ஜனவரி 29ம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8.30 மணிமுதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அவுஸ்திரேலியா RMIT பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கலீல் ரஹ்மான் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், பல முக்கிய துறைசார் நிபுணர்கள் வளவாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய நவீன உலகில், பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற எல்லோருக்கும், ஏதாவது ஒரு துறையில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன. இன்னும், தொழில் பயிற்சிகள், நல்ல எதிர்காலமுள்ள தொழில்வாய்ப்புக்கள் எனப் பலவகையான நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

துரதிஷ்டவசமாக, அவை குறித்த விழிப்புணர்வு, தெளிவு சமூகத்தில் போதாதிருக்கின்றது. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் இறுதியில், கணக்கியல், விஞ்ஞானம், முகாமைத்துவம், நிர்வாகம், மொழி, அரச மற்றும் தனியார் தொழில் வாய்ப்புக்கள், சட்டம், ஊடகம், தொழிநுட்பம், கணினி போன்ற பல்வேறு துறைகளில் தேர்ச்சியும், அனுபவமும் கொண்ட துரைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றும் நடாத்தப்படவுள்ளது.

மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ற துறைகளை மையப்படுத்தி, குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன் முலம், தங்களது துறைகளில் உள்ள வாய்ப்புக்கள், பயன்கள் குறித்து மாணவர்கள் முழுமையான தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டியிலுள்ள கிராமங்கள் வாரியாக கல்வி மற்றும் சமூகநலனுக்காகப் பாடுபடுகின்ற அமைப்புக்கள் இந்நிகழ்ச்சிக்கான ஒத்துழைப்பை வழங்குகின்றன. கடந்த ஆண்டு 12 அமைப்புக்கள் ஒன்றிணைந்திருந்தன. இவ்வாண்டு அது இரட்டிப்பாக அதிகரித்து 25ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் செயல்படுகின்ற அமைப்புக்கள் மூலமாகவே அக்கிராமங்களிலுள்ள மாணவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன், அக்கிராமங்களிலிருந்து வருகின்றவர்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வழிகாட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தொகையினருக்கு மாத்திரமே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத, எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெறாத மாணவர்கள் பின்வரும் இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு விண்ணப்பங்களைப் பெற்று, 23ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மடவளை – Madinian Masters 077-1000608
கல்ஹின்னை – GEDS 077-3142583
உடதலவின்னை – Islamic Youth Forum 077-2399807
கண்டி நகரம் – MMYA 077-8452191
கண்டி கடுகல – MYSK 077-3496232
கண்டி போகொடவத்தை – Islamic Youth Foundation 077-1682373
அருப்பொல – AYWA 077-2981487
அக்குறணை – Undergraduate & Young Graduates Asso. 076-7074707
யடிநுவர – Care & Share Organization 077-7680560
வெலம்பொட – GUIDE 077-434796
உகுரஸ்ஸபிடிய – PPA Ugurassapitiya 077-2665443
கம்பளை – Mercy Welfare Trust 077-8165595
மாவில்மட – ZWS 076-3856695
கலகெதர – Janaza Welfare Association 077-3655980
ஹபுகஸ்தலாவ – HEDS 077-3121822
உடுதெனிய – Helping Hands 077-3030367
கெலிஓய – ECHO Welfare Association 0777-581785
தௌலகல – United Welfare Association 077-0577633
நாவலபிட்டிய – Ahadiya EC 077-5752979
யஹலதென்னை – Ahadiya Society 077-2548310
கடுகண்ணாவ – KDS 077-3408329
தெல்தோட்டை – Patriotic Youth Forum 075-6123320
எனசல்கொல்ல – ETI 077-9810467
உலப்பனை – Youth of Ulapane 077-0155666
தென்னகும்புர – TYWA 077-2202282
ஹீரஸ்ஸகல – Youth Associate 077-8180303

மேலதிக விபரங்களையும், விண்ணப்பங்களையும் 077-5057701 அல்லது 077-1622123 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW