அமெரிக்காவுக்கு வாங்களே.... டொனால்ட் டிரம்ப் அழைப்பு. முள்ளிநியூஸ்

அமெரிக்காவுக்கு வாங்களே.... டொனால்ட் டிரம்ப் அழைப்பு.


அமெரிக்க புதிய ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது உலகில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஆலோசனை நடத்திய இருநாட்டு தலைவர்களும், உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அமெரிக்கா-இந்தியா இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டு செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ள டொனால்ட் டிரம்ப், அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW