கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஜனாதிபதி செயலாளர் சந்தித்துப் பேச்சு

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஜனாதிபதி செயலாளர் சந்தித்துப் பேச்சு வார்த்தை யொன்றை இன்று 04 ஆம் திகதி மேற்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் சம்மந்தமாக இது தொடர்பில் இதன் போது கலந்துரையாடினார்.
ஜனாதிபதி செயலகத்துக் சென்ற போது இவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் சமந்தி ரனசிங்க மற்றும் ஜனாதிபதியுடனும் கல்வி அமைச்சருடனும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பேசினர்.

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் உடனடியாக இரண்டு வாரங்களில் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே முடிந்துள்ளதாக சந்தோஷமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
(இஹ்ஸானா- பரீத்)