வாழைச்சேனை: போதை மாத்திரை வியாபாரி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிரபல்யமான போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் நேற்று (15.01.2017) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைவஸ்து பாவனையை இல்லாமல் செய்வதற்கு வாழைச்சேனை பொலிஸார் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சிவில் உடையில் பிரதேசத்திற்குள் நடமாடிய பொலிஸார் ஓட்டமாவடி பிரதேசத்தில் போதைவஸ்து மாத்திரைகள் வியாபாரம் செய்து வருவதாக பிரபல்யமாக பேசப்பட்டு வந்த ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் இன்று ஓட்டமாவடி மீன் சந்தை பகுதியில் வைத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.சிவதர்சன், பொலிஸ் உத்தியோகத்தர்களான எம்.எஸ்.ஏ.ஜூனைட், எம்.டபள்யூ.தினுஸ, எச்.எம்.அஜித், எம்.எஸ்.எம்.காலிதீன் உள்ளிட்ட குழுவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து நேரசழஎயn 150அப, வுசயஅயனழட 50அபஇ வுசயஅயனழட ஓ 225 ஆகிய மூன்று வகையான போதைமாத்திரைகள் தொல்லாயிரத்தி முப்பது (930) மற்றும் மூவாயிரம் மில்லிகிராம் கஞ்சா என்பன பிரயாண பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.