முள்ளிப்பொத்தானை பத்தாம் கொளனிச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டுள்ளது

திருமலை மாவட்டத்தில் முள்ளிப்பொத்தானை பத்தாம் கொளனிச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இனந்தெரியதோர்களால் தீ வைத்ததால் முற்றாகா சேதத்திற்குள்ளாகியுள்ளன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை முள்ளிப் பொத்தானை 2 ஆம் வாய்க்கால் பகுதியில் இடம் பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது வீட்டிலிருந்து 2 ஆம் வாய்க்கால் பகுதியில் வாயலை பார்வையிடுவதற்காக வீதியில் வைத்து விட்டு வேலையை முடித்து விட்டு வந்து பார்த்த போது இம் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து காணப்பட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

(இஹ்ஸானா பரீத்)
நியாஸ்