நிந்தவூர் முஅல்லிம்களின் முன்மாதிரி முள்ளிநியூஸ்

நிந்தவூர் முஅல்லிம்களின் முன்மாதிரி


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மக்தப் முஅல்லிம்களுக்கான நான்கு மாத விஷேட தஜ்வீத் பாட நெறியை பூர்த்தி செய்த முஅல்லிம்களால் அப்பாட நெறியைக் கற்பித்த ஆசான் மௌலவி எம்.எச்.எம். ராஷித் Qகாரி (ஹாமிதி) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (12 ) நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசலில் மௌலவி எம்.ஏ.அமீர் அலியார் (ஹாமி) தலைமையில் இடம்பெற்றது.

இதில் தஜ்வீத் முறைப்படி புனித அல் குர்ஆனை கற்றுத்தேறிய நிந்தவூரைச்சேர்ந்த 24 முஅல்லிம்கள் கலந்து சிறப்பித்தனர். இதில் மக்தப் மாணவர்களுக்கு தஜ்வீத் முறைப்படி குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட குர்ஆன் கற்பித்தல் படிமுறையின் மூலம் மக்தப் மாணவர்கள் பிரயோசனம் அடையவுள்ளனர்.

இதேவேளை இந்த நிகழ்வானது நிந்தவூரிற்கு வெளியே இருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் திறமையாக தஜ்வீத் முறைப்படி கற்பித்த மௌலவி எம்.எச்.எம். ராஷித் Qகாரி (ஹாமிதி) அவர்களை 24 முஅல்லிம்களும் சேர்ந்து பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னங்கள் வழங்கியும் கௌரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW