இன்புலுவென்சா: கண்டி வைத்தியசாலையில் மூவர் மரணம் முள்ளிநியூஸ்

இன்புலுவென்சா: கண்டி வைத்தியசாலையில் மூவர் மரணம்


கண்டி பிரதான வைத்தியசாலையில் சிறுநீராக நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளர்கள் இன்புலுவென்சா (AH1N1 ) வைரஸ் தாக்குதலினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு நீரகப் பிரிவில் வைத்தியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகஸ்தர்கள் உட்பட எட்டுப் பேர் இதுவரைக்கும் இவ்வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக விடுமுறை லீவைப் பெற்றுக் கொண்டு வைத்தியசாலைக்கு வெளியே சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து சிறு நீரக வாட்டுக்குள் நோயாளர்களை அனுமதித்தல் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சுகாதார அமைச்சின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் நிபுணர் ஜோர்ச் ஜயமஹ, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் என் வசி சமரவீர ஆகியோர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து விசேட பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நோயாளர்களைப் பார்ப்பதற்காக வருகை தருவோர்கள் வாய் மூக்கு (கவசம் ) உறை அணிந்து வருமாறு வைத்தியதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW