திருகோணமலை:மூதூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி விபத்தில் சாரதியொருவர் பலியாகியுள்ளார்.

(இஹ்ஸானா- பரீத்)
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கங்கைப் பாலத்துக்கு அருகில் இன்று செவ்வாய்கிழமை (31) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூதூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி இருவரும் உறவு முறையானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


