விமல் வீரவனசவுக்கு வீட்டிலிருந்து ‘உணவு’
வாகன துஷ்பிரயோக விவகாரத்தில் கைது செய்ய்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு வீட்டில்சமைத்த உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் கைதானதும் பொதுவாக சிறைச்சாலை உணவைத் தவிர்த்து வரும் நிலையே தொடர்கிறது. இதன் பின்னணியில் விமலும் அதைப் பின்பற்றும் அதேவேளை இன்று மதியம் அவரது உடல் நலன் குறித்து மருத்துவ பரிசோதனைக்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.