இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையை மீண்டும் அதே பாடசாலையில் நியமிக்க, பெற்றோர்கள் கோரிக்கை முள்ளிநியூஸ்

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையை மீண்டும் அதே பாடசாலையில் நியமிக்க, பெற்றோர்கள் கோரிக்கை


திருகோணமலை கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட எகுத்தார் வித்தியாலயத்தில் தங்களது பிள்ளைகளுக்கு முதலாம் தரம் தொடக்கம் ஐந்தாம் தரம் வரை கற்பித்தலில் ஈடுபட்டு வந்த ஆசிரியையை திடீர் இடமாற்றம் செய்துள்ளனர்.

இதனால் தொடர்ந்தேச்சியான கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் ஆசிரியை தாங்களது பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புகளை வீடுகளில் கற்றுக் கொடுப்பதும் விசேடமாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தல் போன்ற பல்வேறு கடந்த கால வினாப் பத்திரம் மாதிரி வினாக்கள் கொண்ட பத்திரிகைகள் என்பவற்றைக் கொண்டு சிறந்த கற்றலினால் தாங்களின் பிள்ளைகளின் கல்வியில் ஊக்கத்தை ஏற்படுத்திய தருணத்தில் அவ் ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடியும் வரையாவது தங்களது பிள்ளைகளுக்கு மீண்டும் கற்பிக்க இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையைப் பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW