அமெரிக்காவை மீளக் கட்டியெழுப்புவேன்: ட்ரம்ப் சூளுரை முள்ளிநியூஸ்

அமெரிக்காவை மீளக் கட்டியெழுப்புவேன்: ட்ரம்ப் சூளுரை


வொஷிங்டன், நியுயோர்க் உட்பட்ட இடங்களில் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

வொஷிங்டனில் மாத்திரம் சுமார் 250,000 நேற்றைய தினம் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்காவை மீளக் கட்டியெழுப்பப் போவதாகவும் கல்வி முதல் பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களையும் முழுமையாக மறு சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப.

இதேவேளை, அவரது அமைச்சரவையில் சர்ச்சைக்குரிய பலர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து அரசியல் மட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW