டிரம்புக்கெதிராக ட்விட்டர் அதிரடிச் செய்தி! முள்ளிநியூஸ்

டிரம்புக்கெதிராக ட்விட்டர் அதிரடிச் செய்தி!



ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தடை செய்யும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைக்கெதிராக ட்விட்டர் அதிரடிச் செய்தியொன்றை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

”எல்லா மதங்களையும் சார்ந்த குடியேற்றக்காரர்களினால்தான் ட்விட்டர் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் அக்குடியேற்றவாசிகளுக்காக, அவர்களோடு எழுந்து நிற்போம்!”

இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஸுக்கர்பெர்க் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தமை வாசகர்கள் அறிந்ததே
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW