காதலனை நிறுத்த ரயிலை நிறுத்திய யுவதி கைது.! முள்ளிநியூஸ்

காதலனை நிறுத்த ரயிலை நிறுத்திய யுவதி கைது.!


கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் வெடி குண்டிருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதான குறித்த யுவதியானவள் தன் காதலனை ஊருக்கு செல்லவிடமால் தடுப்பதற்காகவே இவ்வாறன செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதியானவள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27ஆம் திகதியன்று கிடைந்த அனாமதேய தகவலையடுத்து, இரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் சோதனைகளின் பின் ரயில் மீண்டும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டது.

இச் சம்பவத்தினால் பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டதுடன் பயணிகள் மத்தியில் பெரும் பயமும் பீதியும் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW