சாப்பாடு கேட்ட நபர் மீது கத்திகுத்து #இலங்கையில்.

இச் சம்பவத்தில் இமையாணன் மேற்கு பகுதியினை சேர்ந்த கணேசமூர்த்தி கிரிதரன் வயது(50) என்ற நபரே காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
உடுப்பிட்டி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று(18) திருவிழாவின் போது அன்னதானமும் வழங்கப்பட்டது. இடையில் புகுந்த இந்நபர் ''பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என'' கேட்டுள்ளார்.
இதன் போது சபை வைத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் முதியவருடன் முரண்பட்டுள்ளதுடன் கத்தியினால் வயில் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.