UNP நினைத்தபடி ‘ஆட’ முடியாது: டிலான் முள்ளிநியூஸ்

UNP நினைத்தபடி ‘ஆட’ முடியாது: டிலான்


கூட்டணி அரசே தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை மீறி ஐக்கிய தேசியக் கட்சி நினைத்தபடியெல்லாம் ஆட முடியாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா.

இன்றைய அளவில் ஐக்கிய தேசியக்கட்சியினரால் அதிகம் விமர்சிக்கப்படுவது தானே எனவும் இருந்த போதிலும் நடைமுறையில் இருப்பது ஐக்கிய தேசிய அரசில்லை கூட்டணி அரசு என்பதால் ஐக்கிய தேசியக் கட்சியினர் மக்களுக்கு உண்மையைச் சொல்ல பழக வேண்டும் எனவும் 2017 உள்ளூராட்சித் தேர்தலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எழுச்சி நிரூபிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW