போலிஸ் மடியிலேயே கை வைப்பு... 5 இலட்ச திருட்டை விசாரிக்க சென்ற CID யினருக்கு கிடைத்த அதிர்ச்சி.

சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மருந்து பொருட்களை காணவில்லை என, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது, இது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸ் வைத்தியசாலையில் இடம்பெற்ற மருந்து திருட்டு சம்பவத்தை விசாரணைசெய்த நிலையில், இந்த பாரியளவான மருந்துகள் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் 5 இலட்சம் பெறுமதியாக மருந்துகள் திருட்டுப் போயுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.