திறமையற்ற தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் – கபீர் ஹாசிம் முள்ளிநியூஸ்

திறமையற்ற தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் – கபீர் ஹாசிம்



திறமையற்ற தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மக்களுடன் நெருக்கமாக பழக முடியாத, கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியாதவர்கள் தொகுதி அமைப்பாளர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள்.

இவ்வாறு பலவீனமான தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு அந்த சந்தர்ப்பம் தகுதியான புதியவர்களுக்கு வழங்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் தொகுதி அமைப்பாளர் பதவி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கட்சி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் அனைத்து இன சமூகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகளை தொகுதி அமைப்பாளர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டுமென கபீர் ஹாசிம் கோரியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW