தம்புள்ளை முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு ! முள்ளிநியூஸ்

தம்புள்ளை முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு !


தம்புள்ளை நகரில் நேற்று ஏற்பட்ட அசாதாரன நிலையை தொடர்ந்து அங்கிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது நாம் அறிந்ததே..

இந்த நிலையில் இன்று காலை பெரும்பாலான முஸ்லீம் வர்த்தகர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்த நிலையில் சுமார் 15 வரையான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து அவ்வர்த்தக நிலையங்களுக்கு கார் ஒன்றில் வந்துள்ள ஒரு குழுவினர் திறக்கப்பட்டுள்ள சகல முஸ்லீம் வர்த்தக நிலையயங்களையும் உடனடியாக மூடிவிடுமாறு கடும் தூசன வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர்.
அதனை அதனை தொடர்ந்து அங்கு சகல முஸ்லீம் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுஸுக்கு தெரிவித்தார்.

தம்புள்ளை நகருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போது அங்கு உள்ள முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW