மங்களவை பதவி நீக்குக: 22 அமைப்புகள் ஜனாதிபதிக்கு கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி தேசியவாத அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை நீதித்துறையில் வெளியார் தலையீடு இருக்க முடியாது எனும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச அரங்கில் செயற்பட்டு வருவதாக தெரிவித்து குறித்த ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 22 அமைப்புகள் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.