இலங்கையில் கிண்ணியா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் 4வது நாள் முள்ளிநியூஸ்

இலங்கையில் கிண்ணியா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் 4வது நாள்


கிண்ணியா அரசினர் மருத்துவமனையை தரம் உயர்த்தி, அதன் நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி கிண்ணியா பழைய வைத்தியசாலையின் முன்னே ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ருப், எம்.எஸ் தெளபீக் மற்றும் இம்ரான் மஹ்ருப் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முன்னால் நகர சபை தலைவர் Dr. ஹில்மி(LLB) உட்பட பெரும் திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
கிண்ணியா அரசினர் வைத்திய சாலையை தரம் உயர்த்த வேண்டும், சுகாதார அமைச்சகம், கிண்ணியா வைத்தியசாலையின் நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறுகையில், கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலின் விளைவாக 14க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; இந்த நிலையில் வைத்தியசாலையை தரம் உயர்த்தி இதற்கான மருத்துவ வசதிகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும்., இதன் மூலமே மக்களுக்கான சிறந்த சுகாதார சேவையினை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW