அமெரிக்கா வரவேண்டாம்; மஹிந்தவுக்கு எச்சரிக்கை!
அமெரிக்கா, கலிபோர்னியாவில் சமய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மஹிந்த ராஜபக்ச அங்கு விஜயம் செய்ய முயற்சி செய்து வருகின்ற நிலையில் அங்கு வரவேண்டாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ அரச வரவேற்போ, பாதுகாப்போ வழங்கப்பட முடியாத நிலையில் அவருக்கு எதிராக எந்தவொரு தனி நபரும் வழக்குத் தொடர முடியும் எனவும் அதன் பின்னணியில் கைது செய்யப்படக் கூடும் எனவும் மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தினேஷ் குணவர்தன மற்றும் கோத்தபாய ராஜபக்ச அவருக்கு பதிலாக செல்லக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.