காதலியை குத்திக் கொன்ற காதலன்? : அவிசாவளையில் சம்பவம் முள்ளிநியூஸ்

காதலியை குத்திக் கொன்ற காதலன்? : அவிசாவளையில் சம்பவம்

அவிசாவளை ஜஹல்வத்த பகுதியில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 25 வயதான யுவதி என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியின் காதலனான 25 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW