அனுராதபுரத்தில் 3 சடலங்கள் மீட்பு முள்ளிநியூஸ்

அனுராதபுரத்தில் 3 சடலங்கள் மீட்பு

அனுராதபுரத்தில் இன்று -08- காலை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஹாரபாலுகம பிரதேசத்தில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெண் ஒருவரின் சடலம் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்.

உயிரிழந்துள்ள பெண்ணின் சடலம் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

35 வயதுடைய பெண் ஒருவரும், நான்கு வயது மற்றும் ஒரு வயது சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுதாரபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW