இடிந்து விழும் நிலையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் -மக்கள் அச்சத்தில் முள்ளிநியூஸ்

இடிந்து விழும் நிலையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் -மக்கள் அச்சத்தில்



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பழுதடைந்த குறிஞ்சாக்கேணி பாலம் தற்காலிகமாக இரும்புக் கம்பியினால் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில்  உயிர்களையும் காவு கொண்ட குறிஞ்சாக்கேணி பாலம் குறிப்பிடத்தக்கது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பாலத்தினை புனரமைத்துத் தருவதாக தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ள நிலையில் பாலம் இடிந்து விழும் நிலை காணப்படுவதால் பொது மக்கள் இது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பாலம் புனரமைக்கப்படாமை போக்குவரத்தில் ஈடுபடுவோர்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர் .எனவே இவ்விடயம் தொடர்பாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியாவில் உள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் கேட்டுநிற்கின்றனர்

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பாராளுமன்ற உறுப்பினர்களே இது உங்கள் கவனத்திற்கு ..
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW