முஸ்­லிம்­ கடைகள் மீது குண்டுவீச்சு, குற்றவாளிகளை கைதுசெய்ய சிங்கள சமூகம் கோரிக்கை முள்ளிநியூஸ்

முஸ்­லிம்­ கடைகள் மீது குண்டுவீச்சு, குற்றவாளிகளை கைதுசெய்ய சிங்கள சமூகம் கோரிக்கை


கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு வீச்சு தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை. 

போர்வை நகர் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து ஆய்­வு­களை மேற்­கொண்­டனர். பள்ளிவாசலின் சி.சி.ரி.வி. கமெரா பதி­வுகள் தெளி­வாக இன்­மையால் அருகிலுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றின் பதி­வு­களை பெற்றும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக்க பத்­தி­ரன ஆகியோர் இது­தொ­டர்­பாக பூரண விசா­ர­ணை­யொன்­றினை நடத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தும்படி பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வு­களை வழங்­கி­யுள்­ளனர். 

பிர­தேச ஜம் இய்­யத்துல் உலமா சபைக்­கிளை மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை முஸ்­லிம்­களை பொறுமை காக்கும்படியும் உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மை­யாகி விட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளன.

பெரும்­பான்மை சமூகம் இப்­ப­கு­தியில் முஸ்­லிம்­க­ளுடன் நல்­லு­ற­வினைப் பேணி வரு­வதால் வர்த்தக நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு அச்சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW