ராஜித பதவி விலக வேண்டும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முள்ளிநியூஸ்

ராஜித பதவி விலக வேண்டும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்


இன்புலுவன்சா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ள நிலையில் அதற்கான மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுக்கத் தவறி வருவதாகவும் சுட்டிக்காட்டியள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தனது பணியைச் செய்ய முடியாதுவிடின் ராஜித பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் தெளிவற்ற நிலைப்பாட்டில் இருப்பது ஆபத்தானது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை மாலபே தனியார் பல்கலை விவகாரத்தில் அமைச்சருக்கும் குறித்த சங்கத்திற்குமிடையில் முறுகல் நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW