இ.போ.ச – தனியார் பஸ் மோதல்; நடு வீதியில் கைகலப்பு! முள்ளிநியூஸ்

இ.போ.ச – தனியார் பஸ் மோதல்; நடு வீதியில் கைகலப்பு!


ஹற்றன் – கொழும்பு வீதியில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் நடு வீதியில் கைகலப்பு ஏற்பட்டு இ.போ.ச சாரதிசராமரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இ.போ.ச பேருந்தே வேகமாகச் சென்று தனியார் பஸ்ஸினை இடைமறித்ததன் பின்னணியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகள் இணைந்து இ.போ.ச சாரதியைத் தாக்கியதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் இரு பேருந்துகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW