மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு ; மட்டக்களப்பில் சம்பவம் முள்ளிநியூஸ்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு ; மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா காஞ்சிலங்குடாவில் 34 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.



நேற்று புதன் கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற க .புனித நாதன் வயது 34 என்பவருக்கே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு முன் ஏற்பட்ட வாய்த்தர்கமே இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டி சேலை பொலிஸாரல் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.மேலதிக விசாரணைகளை சேர்கோ மற்றும் கொக்கட்டி சேலை பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW