கள்ள மாடுகளை அறுத்து விற்பனை செய்யும் நபர்கள் நால்வர் கைது

கிண்ணியா செய்தியாளர்:
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கள்ள மாடுகளை அறுத்து விற்பனை ஈடுபட்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் நால்வர் இன்று 13 வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியாவில் கடை யொன்றுக்கு இறைச்சியை விற்று மற்றொரு கடைக்கு கொண்டு செல்லும் போது இதனை கண்ணுற்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கியுள்ள தகவல் அடிப்படையில் இவர்கள் கைது செய்யபபட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் உழவு இயந்திர சாரதி ஒருவரும் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக் காலங்களாக பலரின் கால் நடைகள் திருடப்பட்டும், பல இடங்களில் அறுத்து எச்சங்களை விட்டு செல்லப் பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.