மீதொட்டமுல்ல அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

நேற்று பிற்பகல் மீதொட்டமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோர் தொகை 11 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக 12 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒன்பது பேரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

