இலங்கைப் பெண் மீது நடத்தபட்ட இனத்துவேச ரீதியான தாக்குதல் . முள்ளிநியூஸ்

இலங்கைப் பெண் மீது நடத்தபட்ட இனத்துவேச ரீதியான தாக்குதல் .


இங்கிலாந்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத்துவேச ரீதியான தாக்குதல் நடத்தப்படடுள்ளது.

தாம் கேட்ட சிகரட் வகையை வழங்காத காரணத்தினால், இங்கிலாந்தின் மேர்சிசைட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு எதிராக செஃப்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது தாக்குதல்தாரிக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 16 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்ததை அடுத்து, அங்கு இனரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதுவும் அவ்வாறான ஒன்றே என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதமும் இலங்கையர் ஒருவர் மீது பாடசாலை மாணவர்கள் சிலர் இனரீதியான தாக்குதல் நடத்தியதுடன், நாட்டில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிரவும்:
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW