ஷார்ஜா: இலங்கைப் பெண் குத்திக் கொலை; ஒருவர் கைது!

ஷார்ஜாவில் 28 வயது இலங்கைப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சம்பவத்தில் 38 வயது இலங்கை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாகக் கருதப்படும் நபரை விரல் அடையாளம் மற்றும் ஏனைய புலனாய்வுத் தகவல்களைக் கொண்டு எட்டு மணி நேரத்திற்குள் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் கைதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.