இலங்கைக்கு செல்லவேண்டாம் : கட்டார் அரசாங்கம் எச்சரிக்கை!
கட்டார் பிரஜைகளை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் அவர்களது டுவிட்டர் தளத்தின் ஊடாக குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் எச்.1.என்.1 என்ற பன்றிக்காய்ச்சால் தொற்று பரவிவருவதால், அந்நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்று பரவியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கட்டார் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலர் குறித்த தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் நிகந்துள்ளதாகவும் கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.