கொரியா செல்வதைத் தவிர்த்த அமெரிக்க போர்க்கப்பல்கள்
வட கொரியா – அமெரிக்கா இடையே கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் நிலவி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் கொரிய கடற்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போர்க் கப்பல்கள் மற்றும் விமானந்தாங்கிகள் அங்கு அனுப்பப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் அணு ஆயுத தாக்குதல் நடாத்தப்படும் என வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், வட கொரியாவுடனான பொறுமை எல்லை மீறிவிட்டது என தெரிவித்திருந்த அமெரிக்கா, யுத்த சூழ்நிலையை உருவாக்கும் வகையில் போர்க்கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தது.
எனினும், அவை கடந்த வார இறுதியில் இந்து சமுத்திரத்தைத் தாண்டவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வட-கொரிய விவகாரத்தை சீனாவுடன் இணைந்து தாம் கையாள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.