மீதொட்டமுல்லையில் இனி குப்பை கொட்டுவதில்லை: அரசு முடிவு
மீதொட்டமுல்லை குப்பை மேட்டின் பகுதியொன்று சரிந்ததில் நேற்றைய தினம் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோர் தொகை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில் இனி அப்பகுதியில் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் இடம்பெறாது என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மாற்றீடாக இரண்டு இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
625 பேர் அளவில் இடம்பெயர்ந்தும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்ற நிலையில் இறந்தவர்களில் ஐந்து குழந்தைகள் மற்றும் பெண்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.