இறக்காமம், மாணிக்கமடு பிரதேசத்தின் மாயக்கல்லி மலைக்கு நேரடி விஜயம்-ரவூப் ஹக்கீம் முள்ளிநியூஸ்

இறக்காமம், மாணிக்கமடு பிரதேசத்தின் மாயக்கல்லி மலைக்கு நேரடி விஜயம்-ரவூப் ஹக்கீம்



இறக்காமம், மாணிக்கமடு பிரதேசத்தின் மாயக்கல்லி மலையில் பெளத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும் அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுக்கம் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (30) விசேட உலங்கு வானூர்தி மூலம் களத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.

பள்ளிவாசல் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இறக்காமம் பள்ளிவாசலில் வைத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல். நஸீர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சுர், அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன்,  ஐ.எல்.எம். மாஹிர், அப்துல் ரஸ்ஸாக் ஜவாத், தவம், சிப்லி பாருக் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

(இஹ்சான பரீட்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW