மேதினம்: 5000 இ.போ.ச + 7000 தனியார் பேருந்துகள் முள்ளிநியூஸ்

மேதினம்: 5000 இ.போ.ச + 7000 தனியார் பேருந்துகள்


16க்கும் மேற்பட்ட மேதின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சங்கமும் பெருந்தொகையான பேருந்துகளை ஒதுக்கியுள்ளன.

இதனடிப்படையில் இ.போ.ச 5000 பேருந்துகளையும் தனியார் பேருந்து சங்கம் 7000 பேருந்துகளையும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியே பெரும்பான்மையான பேருந்துகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மேதின கூட்டத்துக்கு 4000 பேருந்துகள் தேவைப்படும் என முன்னதாக துமிந்த திசாநாயக்க தெரிவித்திருந்த அதேவேளை லட்சக்கணக்கில் காலிமுகத்திடலுக்கு மக்களை வருமாறு மஹிந்தவும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW